உலக இலக்கியத்தின் உலராத ஊற்று; ரஷ்ய படைப்புகளில் என்றும் வீசும் காற்று!

- போரும் அமைதியும் படைத்த லியோ டால்ஸ்டாய்!

ரஷ்ய இலக்கியமென்பது உலக இலக்கியத்தின் உலராத ஊற்றுகளிலொன்று. ஆயினும் தற்போது நடைபெறும் ரஷ்ய - உக்ரைன் யுத்தம் காரணமாக மேற்கு நாடுகள் ரஷ்யா மேல் பல்வகை தடைகளை விதித்து வருவதன் நிலையோ ரஷ்ய நூல்கள் மீதான இந்தப் புறக்கணிப்பும் என்ற எண்ணம் தோன்றாமலில்லை.

ரஷ்ய இலக்கிய வாசத்தினை யாராலும் தடுக்க முடியாது. மறைக்க முடியாது. உலக இலக்கியத்துக்கு அதன் பங்களிப்பென்பது போற்றுதற்குரியது.

இலங்கையில் இந்தியப்படைகளின் மேலோங்கியிருந்த சமயத்தில் இந்திய தேசிய விடுதலைக்காகக் குரல் கொடுத்த பாரதியின் எழுத்துகளை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை.

ரஷ்ய இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயர் லியோ டால்ஸ்டாய். ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையினை அற்புதமாக விளக்கவும் செய்த லியோ டால்ஸ்டாய் காலம் கடந்தும் அனைவராலும் அவரது எழுத்துக்கள் வாசிக்கப்பட்டு வருகின்றன.

லியோ டால்ஸ்டாய் புதின எழுத்தாளர்களுள் மிகச் சிறந்தவர்களுள் ஒருவராக மதிக்கப்படுகிறார். இவரது மிகச் சிறந்த ஆக்கங்களான போரும் அமைதியும், அன்னா கரேனினா ஆகியவை, 19 ஆம் நூற்றாண்டு ரஷ்ய வாழ்க்கையை விபரிப்பதில் உண்மைவாதப் புனைகதைகளின் உயர்நிலையைக் காட்டுகின்றன.

லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 1828-ம் ஆண்டு செப்டம்பர் 9இல் பிறந்தார். காலம் கடந்தும் அனைவராலும் அவரது எழுத்துக்கள் வாசிக்கப்பட்டு வருகின்றன. நாவல்கள் உட்பட சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், சிறுவர்களுக்கான நீதிக்கதைகளும் எழுதியுள்ளார்.

இவருடைய அன்னா கரீனீனா, போரும் அமைதியும் போன்ற நாவல்கள் புகழ்பெற்றவை. டால்ஸ்டாய் இறுதி வரை வன்முறைகளுக்கு எதிராகவே வாழ்ந்து வந்துள்ளார்.

பாராட்டுவதற்கான கலைச்சிறப்புடைய நூல்களை மட்டும் டால்ஸ்டாய் படைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையினை அற்புதமாக விளக்கவும் செய்தார் என டால்ஸ்டாய் மறைவின் போது லெனின் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லியோ டால்ஸ்டாய், மத்திய ரஷ்யாவில் உள்ள யஸ்யானா போல்யானாவில் பிறந்தார். டால்ஸ்டாய்கள் ரஷ்யாவில் பெயர்பெற்ற பழைய பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ரஷ்ய உயர்குடியின் பெரும் குடும்பங்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள். அலெக்சாண்டர் புஷ்கின், லியோ டால்ஸ்டாயின் உறவினராவார். லியோ டால்ஸ்டாய் வகுப்பு உணர்வு கொண்டவராக இருந்தார்.

உலகப் புரபல்யமான ‘போரும்அமைதியும்’ ஐந்து ரஷ்ய அரச குடும்பங்களின் பார்வையில், ரஷ்ய மீதான பிரான்சியப் படையெடுப்பை அடுத்த நிகழ்வுகளையும் சார்மன்னர் சமூகத்தில் நெப்போலிய காலத்தின் தாக்கத்தையும் விரிவாக விபரிக்கின்றது.

போரும் அமைதியும் நாவல்:

போரும் அமைதியும் (War and Peace, ரஷ்ய மொழி:) ருசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய புதினம் ஆகும். இந்த நூல் முழுமையாக 1869ஆம் ஆண்டு முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது. இதிகாச அளவிலான இந்நூல் உலக இலக்கியத்தில் மிகவும் முதன்மையானதாக இன்றும் கருதப்படுகின்றது. இதுவும் டால்ஸ்டாயின் மற்றொரு படைப்பான அன்னா கரேனினாவும் (1873–1877) அவரது சிறந்த இலக்கியச் சாதனையாக பல காலங் காலமாக கருதப்படுகின்றன.

டால்ஸ்டாய், போரும் அமைதியும் "புதினமல்ல, கவிதையுமல்ல, வரலாற்று பதிவேடுமல்ல" எனக் கூறியுள்ளார்.

தமிழில் மொழிபெயர்ப்பான நாவல்:

டி. எஸ். சொக்கலிங்கம் இப்புதினத்தை தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

சிறந்த இதழியலாளர் மட்டுமல்ல, சொக்கலிங்கம் சிறந்த படைப்பு இலக்கியவாதியும் ஆவார். லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற நாவலான போரும் அமைதியும் என்ற நாவலை தமிழாக்கம் செய்தார். இது தவிர, சிறுகதை, நாவல், கவிதை என இலக்கியத்தின் அத்தனை துறைகளிலும் சிறப்பான பங்கினை நல்கியுள்ளார் சொக்கலிங்கம்.

லியோ டால்ஸ்டாய் ரஷ்ய இலக்கியத்தின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவராவார். அவரது படைப்புகளில் போரும் அமைதியும் மற்றும் அன்னா கரேனினா மற்றும் ஹதாஜி முரத், இவான் இலிச்சின்மரணம் ஆகியவை போற்றுதலுக்குறிய படைப்புகளாகும்.

விமர்சகர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் டால்ஸ்டாயின் கலைக்கு தாங்களே அத்தாட்சிகளாய் இருந்திருக்கின்றனர். விர்ஜினியா வூல்ஃப் ஒரு படி மேலே டால்ஸ்டாயை அனைத்து நாவலாசிரிகளையும் விட மிகச்சிறந்தவர் என்று அறிவித்தார்.

டால்ஸ்டாயின் சமகாலத்தவர்கள் அவருக்கு உயர்ந்த மரியாதை செலுத்தினார்கள். பியோடார் தாஸ்தொவெஸ்கி அவரை அனைத்து நாவலாசிரியர்களை விடவும் மிகப்பெரியவராக கருதினார். போரும் அமைதியும் மொழிபெயர்ப்பைப் படித்தபோது கஸ்டவ் புளூபெர்ட், டால்ஸ்டாய் ஒரு சிறந்த கலைஞர் மற்றும் சிறந்த உளவியலாளர் என்று விபரித்தார்.

அன்டோன் செக்கோவ் அவர்கள், டால்ஸ்டாயை சந்திப்பதற்கு அடிக்கடி வருகை தருவதுண்டு, அன்டோன் அவர்கள் டால்ஸ்டாயைப் இவ்வாறு போற்றுகிறார், "இலக்கியம் டால்ஸ்டாய் போன்றோர் வைத்திருக்கும் போது, ஒரு எழுத்தாளராக இருப்பதற்கு எளிதானது, இனிமையானது; நீங்கள் எதையாவது சாதித்து விட்டீர்கள் அல்லது இன்னமும் எதையும் சாதிக்கவில்லை என்று தெரிந்தாலும் கூட, அது வேறு விதமாக இருக்கலாம், ஏனெனில் டால்ஸ்டாய் எல்லோருக்காகவும் சாதிக்கிறார். ஏனெனில் இலக்கியத்தில் முதலீடு செய்யப்படும் அனைத்து நம்பிக்கைகளையும் அபிலாஷைகளையும் அவர் நியாயப்படுத்துகிறார்” எனக் கூறியுள்ளார்.

போரும் அமைதியும் எழுதப்பட்ட நாவல்களிலே மிகப் பெரிய நாவல்களில் ஒன்று, அதன் வியத்தகு அகலத்திற்கும் ஒற்றுமைக்கும் குறிப்பிடத்தக்கது. அதன் பரந்த கதைக்களம் 580 கதாபாத்திரங்களை உள்ளடக்கியது, பல வரலாற்றுடன் மற்றும் கற்பனை கலந்து உள்ளது. இந்தக் கதையானது குடும்ப வாழ்க்கையிலிருந்து தொடங்கி நெப்போலியனின் தலைமையகத்திற்கும், ரஷ்யாவின் அலெக்ஸாண்டர் நீதிமன்றத்திற்கும், ஆஸ்டெர்லிட்ஸ் மற்றும் போரோடினோ போர்க்களத்திற்குள்ளும் நகர்கிறது.

வரலாற்றின் தத்துவ புதினம்:

இந்த நாவல் டால்ஸ்டாயின் வரலாற்றின் தத்துவத்தையும், குறிப்பாக நெப்போலியன் மற்றும் அலெக்ஸாண்டர் போன்ற தனிநபர்களின் முக்கியத்துவத்தையும் ஆராய்கிறது. ஆச்சரியப்படத்தக்க வகையில், டால்ஸ்டாய் போரும் அமைதியும் ஒரு நாவலாக அவர் கருதவில்லை. அந்த நேரத்தில் எழுதப்பட்ட பெரும் ரஷ்ய கற்பனைகளில் பலவற்றை நாவல்கள் என்று அவர் கருதினார்.

முதலில் எழுதிய போரும் அமைதியும் ஆக்கத்தை டால்ஸ்டாய் புதினத்திற்கும் மேலானதாகக் கருதியதால் இதனையே தம்முடைய முதல் உண்மையான புதினமாக கருதினார். மேலும் பின்னாளில் அந்த நாவல்கள் வாழ்க்கையின் உண்மையான யதார்த்தத்தைக் காட்டவில்லை என்றும் வாதிட்டார். ‘போரும் அமைதியும்’ படைத்த லியோ டால்ஸ்டாய் உலகின் மகத்தான இலக்கிய சிருஷ்டியே!

லியோ டால்ஸ்டாய் படைத்த புதின இலக்கிங்களினால் வையக வரலாற்றில் ஒரு மகத்தான இலக்கிய சிருஷ்டியாகவே மிளிர்கின்றார். போரும் அமைதியும் புதினமானது உலக இலக்கியத்தின் உலராத ஊற்றாகும். லியோ டால்ஸ்டாய் ரஷ்ய படைப்புகளில் என்றும் ஒளிரும் விடிவெள்ளியே!

ஐங்கரன் விக்கினேஸ்வரா...


Add new comment

Or log in with...