பேராதனை பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

கண்டியில் கடந்த வாரம் காணாமல்போன 24 வயதான பேராதனை பல்கலைக்கழக மாணவன் கண்டி - மகாவலி ஆற்றங்கரையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்த மாணவன் யக்கல பகுதியைச் சேர்ந்தவரெனவும் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கல்வி பயில்பவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அம் மாணவன் காணாமல்போயிருந்தார். மாணவனால் 16 ஆம் திகதியிடப்பட்டு எழுதப்பட்ட கடிதம் மாணவனின் விடுதி அறையில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது. மாணவனின் மரணம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...