அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டுப்பாடு

- அழைத்துச் செல்லும் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் இறுக்கமான நடைமுறை
- ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை அத்தியாவசியப் பயணங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தும் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்றையதினம் (22) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு, அரச செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை அத்தியாவசியப் பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

அவ்வாறான சுற்றுப்பயணங்களுக்கு அவசியமான அலுவலர் அல்லது குறித்த சுற்றுப்பயணக் கடமைகளுக்கு அத்தியாவசியமான ஒருசிலரை மாத்திரமே அழைத்துச் செல்ல வேண்டுமெனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...