உய்குர்கள் தொடர்பில் ஐ.நாவுக்கு வலியுறுத்து

உய்குர் சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை மற்றும் மனித உரிமைகள் பேரவையில் கலந்துரையாடப்பட வேண்டும் என்று உலக உய்குர் கொங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கொங்கிரஸின் உப தலைவர் விடுத்துள்ள ட்வீட்டில் மேற்கண்டவாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு உய்குர்களின் நிலை குறித்து அறிக்கைகள் விடுதல், கவலை தெரிவித்தல் என்பவற்றோடு நடவடிக்கைகளையும் பார்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...