அவுஸ்திரேலிய கடற்கரையில் 200 திமிங்கிலங்கள் நிர்க்கதி

அவுஸ்திரேலியாவின் டெஸ்மேனிய மாநில மேற்குக் கரையில் 200க்கும் அதிகமான திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளன.

இவ்வாறு கரையொதுங்கிய திமிங்கிலங்களில் பாதி அளவானவை தொடர்ந்து உயிருடன் காணப்படுவதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிக மோசமான திமிங்கிலங்கள் கரையொதுங்கிய சம்பவம் நிகழ்ந்த மக்குரி ஹார்பர் பகுதியிலேயே தற்போதைய சம்பவமும் இடம்பெற்றுள்ளது. திமிங்கில மீட்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.


Add new comment

Or log in with...