இரத்தினபுரி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஜெய்லாணி தேசிய பாடசாலை மற்றும் கனகநாயகம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 6, 7 மாணவர்களுக்கான சதுரங்க பயிற்சி மற்றும் அறிமுக நிகழ்ச்சித் திட்டத்தின் 2ஆவது கட்டம் கடந்த 17, 18, 19 ஆகிய தினங்களில் ஜெய்லானி தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு வளவாளராக அம்பாறை மாவட்ட சதுரங்க விளையாட்டு அமைப்பாளர் ஏ.எம். ஸாகிர் அஹமட், கனகநாயகம் மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் இன்ஸாப் ஷா முஹம்மட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் இரண்டு நாள் சதுரங்க போட்டிகள் நடாத்தப்பட்டு முதல் 5 இடங்களை பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாளிகைக்காடு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...