அக்கரைப்பற்று பிரிமியர் லீக் தொடரின் சீருடை அறிமுகம்

அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் ஆதரவில் அக்கரைப்பற்றில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ‘அக்கரைப்பற்று உதைபந்தாட்ட பிரிமியர் லீக் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளுக்கான சீருடைகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் ஐய்னா வீச் காடர்னில் உதைபந்தாட்ட லீக்கின் தலைவரும், மாநகர சபை உறுப்பினருமான ஏ.ஜீ. அஸ்மி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்றின் உதைப்பாந்தாட்ட வீரர்கள் மற்றும் சீருடைக்கு அணுசரணை வழங்கிய அணுசரணையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...