கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் திருமலை எழுத்தாளருக்கான வாண்மை விருத்தி செயலமர்வு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் மற்றும் பெண் ஆளுமைகளை ஊக்குவிக்கும் முகமாக திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பலதரப்பட்ட நிகழ்வுகள், ஒன்றுகூடல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் தலைமையில் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரதேச ரீதியாக கலாசார உத்தியோகத்தர்கள் ஏற்பாட்டில் பெண்கள் ஆளுமை விருத்தி ஒன்றுகூடல், கலை இலக்கிய மன்றங்களுக்கான ஒன்றுகூடல் மற்றும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கமைய கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட எமுத்தாளர்களுக்கான வாண்மை விருத்தி ஒருநாள் செயலமர்வு அண்மையில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

மாகாணப் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் தலைமையில் இச்செயலமர்வில் நடைபெற்றது. சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர்களான வி.கோணேஸ்வரன், க.அன்பழகன், வி.குனபாலா,

மற்றும் திருமதி ம. சத்தியவானி ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இச்செயலமர்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஏ.எப்.எம்.அஷ்ரப், ஒய்வுநிலை அதிபரும் மூத்த எமுத்தாளருமான திருமலை நவம் மற்றும் திருமதி பானு சுதாகரன், கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் கலை கலாசார சார்ப்புலம் பேராசிரியர் பாலசுகுமார் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வில் இலக்கியவாதிகள்,பெண் ஊடகவியளாலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என பல்துறை சார்ந்த எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

பா. விபூஷிதன்...

(திருகோணமலை)


Add new comment

Or log in with...