வெள்ளி, சனி, ஞாயிறு மின்வெட்டு: 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

நாளை (23) வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) வரை 2 மணித்தியாலங்கள் 20 நிமிட திட்டமிட்ட மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பழைய லக்ஷபான நீர் மின் நிலையம் (Old Laxapana Stage 1) இயங்காமை, கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தில் (Westcoast) போதிய எரிபொருள் கையிருப்பில் இல்லாமை, மின்சார கேள்வி திடீர் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, இலங்கை மின்சார சபை (CEB) முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

நேற்றையதினம் (21) எவ்வித காரணங்களும் முன்வைக்காமல் இலங்கை மின்சார சபை முன்வைத்த 2 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று உரிய காரணங்களை முன்வைத்தமைக்கு அமைய, இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில்,

செப்டெம்பர் 23 - 25 : 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW:
- பகலில் 1 மணி நேரம்
- இரவில் 1 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்
மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

(பிரதேச ரீதியான மின்வெட்டு அட்டவணை விரைவில் இணைக்கப்படும்)

இன்றைய (22) மின்வெட்டு அட்டவணை வருமாறு


Add new comment

Or log in with...