இளைஞன் மீது ஓடஓட வாள்வெட்டு தாக்குதல்

யாழ். நவாலியில்கும்பல் ஒன்று அடாவடி

வீதியில் ஓட ஓட 18வயது இளைஞன் ஒருவர் மீது சரமாரியாக வாள் வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று யாழ். நவாலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.  

கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த ச. துசாளன் (வயது 18) எனும் இளைஞன் மீதே வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

நவாலி கிழக்கு பகுதியிலுள்ள நண்பனின் பிறந்தநாளுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று விட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, நவாலி சம்பந்தப்பிள்ளையார் ஆலயத்துக்கருகில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 05 பேர் கொண்ட குழு வாள் வெட்டை நடத்தியுள்ளது. தாக்குதலுக்கிலக்கான இளைஞன் வன்முறை கும்பலின் தாக்குதலிலிருந்து தப்பிக்கொள்வதற்காக வீதியில் ஓடிய போதிலும் துரத்தி துரத்தி சரமாரியாக வாள் வெட்டு நடத்திவிட்டு தப்பிச் சென்றது.

யாழ்.விசேட நிருபர்


Add new comment

Or log in with...