கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும்; பட்டம் ஏற்றி போராட்டம்

வடக்கு - கிழக்கு மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வினை வழங்கக் கோரி இன்று (19) அரியாலை கிழக்கில் பட்டம் ஏற்றி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நூறு நாள் செயல் முனைவுப் போராட்டத்தின் 50ஆவது நிறைவு நாளை முன்னிட்டு இவ்வாறு பட்டம் ஏற்றி அரசியல் தீர்வை கோரிய கனவயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் சட்டத்தரணி அம்பிகா சிறிதரன் கலந்துகொண்டு அரசியல் தீர்வின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளித்திருந்தார்.

சாவகச்சேரி விஷேட நிருபர்


திருகோணமலையிலும் நிகழ்வு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒழுங்கு படுத்தலுடன் கடந்த ஆவணி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 50ஆவது நாள் இன்று (19)  திருகோணமலை கடற்கரை முன்றலில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வுகளை கோரிய பதாகைகள் மற்றும் கோஷங்களை உள்ளடக்கிய வகையிலான ஐம்பது பாரியளவான பட்டங்கள் ஏற்றி வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன்  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100 நாட்கள் செயல்முனைவு  தொடர்பில் அறிக்கை ஒன்றிணையும் வெளியிட்டுள்ளனர்.

அறிக்கையில் நாங்கள் நாட்டை கொண்டாடுவோம் தனியர சோ கேட்கவில்லை இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கின்றோம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும்.

13ஆவது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துகின்றது.

இலங்கையில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களாகிய நாம் ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை அரசுகளின் இனவாத கொள்கைகளால் பல்வேறு வழிகளிலும் அடக்கப்பட்டு வந்துள்ளோம் இது இன்றுவரை தொடர்கின்றது இதுவே தமிழ் பேசும் மக்கள் தமக்கான அரசியல் தீர்வு மட்டும் அதிகார பரவலாக்கும் குறித்து சிந்திக்க வேண்டிய விடயமாக வளர்ச்சியடைந்தது.

இதன் குறித்த விடயத்தின் நியாயத் தன்மையை அண்டை நட்பு நாடான இந்தியாவும் சர்வதேச நாடுகளும் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளன இவற்றின் விளைவுகளாகவே இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் அதிகார பரவலாக்கும் சார்ந்து இந்தியா இலங்கை அரசுடன் செய்து கொண்ட 1987இல் இலங்கை இந்தியா ஒப்பந்தம் மற்றும் 1999 தொடக்கம் 2008 வரையான காலப்பகுதியில் நோர்வே நாட்டின் மத்திய துவம் மற்றும் 2022 ஆம் ஆண்டில் சமாதானம் உணர்வால் மற்றும் மேற்கட்டு மனம் சார்ந்த பங்களிப்பை செய்வதற்கு ஜப்பான் நாட்டின் அமைச்சரவை திரு எஸ்சி அக்காசி அவர்களை இலங்கைக்காக நியமித்தவை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

1987 இன் பின்னர் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசுகள் எதுவுமே அதிகார பரவலாக்கத்தை நிராகரிக்கவில்லை விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் அதிகார பரவலாக்கும் சார்ந்த உரையாடலை மேற்கொள்ள வேண்டிய நிலையே காணப்பட்டது.

1987 முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக அதிகார  பரவலாக்கத்திற்கான 13வது திருத்தச் சட்டத்தை அரசியலமைப்பிலே கொண்டு வந்தார்.

அதைத்தொடர்ந்து 1990 ஆம் ஆண்டுகளில் அப்போதைய ஜனாதிபதி ரகசிய பிரேமதாசர் அரசியல் தீர்வுக்கான திட்டங்களை முன் வைத்தார் அவரின் காலத்தில் அதாவது 1991களில் திரு மங்களமுன சிங்க தலைமையில் 45 பேர் கொண்ட பாராளுமன்ற தேர்வு குழு அமைக்கப்பட்டு அங்கு தீர்வு திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் போது தம்பலகாமம், மூதூர், குச்சவெளி, கிண்ணியா போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமக்கான உரிமைகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததுடன் சிறந்த தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் இதன்போது கேட்டுக் கொண்டனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...