இந்தியா - சவூதி உறவுகளின் முக்கியம் பற்றி வலியுறுத்தல்

சவூதி அரேபியா சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியா மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையிலான மூலோபாய பொருளாதார உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உள்ளார்.

ரியாதில் உள்ள இளவரசர் சவுத் அல் பைசல் நிறுவன இராஜதந்திர கற்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராஜதந்திரிகளிடம் உரையாற்றிய அவர், உலகம் சுருங்கி இருக்கும் நேரத்தில் இந்தியா–சவூதி மூலோபாய உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

'எமது கூட்டிணைவு பகிர்ந்த வளர்ச்சி, சுபீட்சம், ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியை உறுதி செய்கிறது' என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...