உக்ரைனுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகள்

உக்ரைனுக்கான இந்தியத் தூதுவர் ஹார்ஷ் குமார் ஜயின் உக்ரைன் மக்களுக்கான 7,725 கிலோ மனிதாபிமான உதவிகளை அந்நாட்டு சுகாதார பிரதி அமைச்சர் ஒலெக்சி யரமென்கோவிடம் கையளித்துள்ளார்.

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருந்து உபகரணங்கள் இந்த உதவியில் அடங்குகிறது. இந்தியா கடந்த மார்ச் மாதத்திலேயே உக்ரைனுக்கு தனது முதல் மனிதாபிமான உதவிகளை வழங்கி இருந்தது. உக்ரைன் போர் ஆரம்பித்தது தொடக்கம் உடன் விரோத நடவடிக்கைகள் நிறுத்தும்படியும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும்படியும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


Add new comment

Or log in with...