பங்குச் சந்தை நேற்றைய மொத்த புரள்வு ரூ. 5.33 பில்லியனாக பதிவு

கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்து பங்குகளும் நேற்று உயர்வடைந்துள்ளன. அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் பத்தாயிரத்தைக் கடந்துள்ளதுடன் நேற்றைய மொத்த புரள்வு 5.33 பில்லியன்களாக (5,330,790,751.60) பதிவாகியுள்ளது.

அதன்படி நேற்று அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 158.27 ஆக பதிவாகியுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் நேற்று 10,072,38 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

அதன்படி நேற்றைய நாளின் இறுதியில் மொத்தமாக 188,977,993 பங்குகள் பரிமாறப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச்சந்தை தெரிவித்துள்ளது.

அதே வேளை கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல்களுக்கான நேரத்தை நீடிப்பதற்கு நேற்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேரங்களாக காணப்பட்ட நடவடிக்கைகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை இரண்டரை மணித்தியாலங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாளாந்த கொடுக்கல் வாங்கல் மற்றும் திறந்த ஏலம் ஆகிய நடவடிக்கைகளை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...