செப்டெம்பர் 19: முற்பதிவு செய்தோருக்கு கடவுச்சீட்டு ஒரு நாள், சாதாரண சேவை

எதிர்வரும் திங்கட்கிழமை, செப்டெம்பர் 19ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஒரு நாள் மற்றும் சாதாரண கடவுச்சீட்டு சேவைகள் செயல்படுத்தப்படுமென, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரம் குறித்த சேவைகள் முன்னெடுக்கப்படுமென, திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய, திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள பிராந்திய அலுவலகங்களில் இதற்கான சேவைகள் முன்னெடுக்கப்படுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாம் எலிசெபெத் மகாராணியின் மறைவையொட்டி, எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதி துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, அன்றையதினம் விசேட அரசாங்க விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...