2021 A/L பரீட்சை பெறுபேறு மீள்திருத்த விண்ணப்பம் கோரல்

- செப்டெம்பர் 15 - 28 வரை ஒன்லைனில் மாத்திரம்

2021 (2022) உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு விண்ணப்பங்களை http://doenets.lk ஊடாக ஒன்லைன் மூலம் சமர்ப்பிக்க நாளை (15) முதல் செப்டெம்பர் 28 ஆம் திகதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2021 க.பொ.த. உயர்த தர பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதி இணையத்தில் வெளியிடப்பட்டன.

கடந்த 2021 இல் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை இவ்வருடம் பெப்ரவரி 07ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 05ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் சார்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவித்தல் வருமாறு...

க.பொ.த. (உ தரப் பரீட்சை - 2021 (2022) பெறுபேறு மீளாய்வு விண்ணப்பப்படிவம் பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்

1. மேற்குறித்த பரீட்சையின் மீளாய்வுக்கு விண்ணப்பப்படிவங்கள் நிகழ்நிலையில் மாத்திரம் கோரப்படும்.

2. விண்ணப்பம் கோரப்படுதலானது 2022.09.15 ஆம் திகதி ஆரம்பமாவதோடு 2022.09.28 ஆம் திகதி நிறைவடையும்.

3. மீளாய்வுக்காக விண்ணப்பிப்பதற்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்

  • பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (https://www.doenets.lk) இனுள் பிரவேசித்து 'எமது சேவை' என்பதின் கீழ் உள்ள நிகழ்நிலை விண்ணப்பப்படிவம் பாடசாலைப் பரீட்சைகள்' இன் மீது Click செய்வதன் மூலம்
  • பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ நடமாடும் தொலைபேசி பிரயோகம் (Mobile Application) ஆன DOE இற்கு சென்று நிகழ்நிலை விண்ணப்பப்படிவம் பாடசாலைப் பரீட்சைகள்' இன் மீது Click செய்வதன் மூலம்
  • https://onlineexams.gov.lk/eic இனுள் பிரவேசிப்பதன் மூலம்

4. முறைமைக்குள் பிரவேசிக்கும் போது தாங்கள் (உ/தர) 2021(2022) பரீட்சைக்குத் தோற்றிய போது பயன்படுத்திய பரீட்சை  சுட்டெண் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தையே பயன்படுத்துதல் வேண்டும்.

5. விண்ண ப்பப்படிவத்தை பூரணப்படுத்துவதற்கு முன்பாக Technical Instructions, Common Instructions அறிவுறுத்தல் வீடியோவைப் பார்த்தல் என்பன சரியான முறையில் படிவத்தை நிரப்புவதற்கு அத்தியாவசியமானதாகும்.

6. ஒரு பாடத்துக்கான மீள்பரிசீலனை செய்வதற்கான கொடுப்பனவு ரூபா 250 ஆகும். தபால் அலுவலகத்திலோ அல்லது Credit card / Debit card மூலமோ பணத்தைச் செலுத்தலாம்.

7. பணத்தைச் செலுத்திய பின்பு விண்ணப்பப்படிவத்தை PDF முறையில் பதிவிறக்கம் (Download) செய்யலாம் என்பதோடு அவ்விண்ணப்படிவத்தை தங்களது பொறுப்பில் வைத்திருக்கவேண்டும். பணத்தைச் செலுத்திய பின்பு தங்களது  தொலைபேசி இலக்கத்துக்கு SMS செய்தி கிடைக்கப்பெறும்.

8. நீங்கள் பெறுபேறு மீளாய்வு செய்வதற்கு எதிர்பார்க்கும் சகல பாடங்களோடு மீளாய்வு விண்ணப்பப்படிவத்தில் கோரப்பட்ட விபரங்களைச் சரியாகப் பூரணப்படுத்துதல் விண்ணப்பதாரியின் பொறுப்பாகும். உரிய பணம் செலுத்தப்படாத விண்ணப்பப்படிவங்கள் எந்தவித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும். விண்ணப்பப் படிவங்களுக்கென செலுத்தப்பட்ட பணம் திருப்பிச் செலுத்தப்பட மாட்டாது.

9. பாட எண் : 12 - பொதுச் சாதாரணப் பரீட்சை பாடத்தில் 30 இற்குக் குறைவான புள்ளிகள் பெற்றதால் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறாத விண்ணப்பதாரிகள் அப்பாடத்திற்கும் மீளாய்வுக்காக விண்ணப்பிக்க முடியும்.

10. இது தொடர்பான ஏதேனும் விசாரணைகள் தேவைப்படின் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக  விசாரணைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மதிப்பீட்டுக் (பாடசாலைகள் பரீட்சை) கிளை: 011 - 2785231/0112785216/0112784037
உடனடி அழைப்பிற்கு: 1911

L. M. D. தர்மசேன
பரீட்சை ஆணையாளர் நாயகம்

PDF File: 

Add new comment

Or log in with...