Asia Cup 2022 - Super 4; INDvSL: இலங்கை 6 விக்கெட்டுகளால் வெற்றி; இறுதிப் போட்டிக்கு தெரிவு

- இன்று பாகிஸ்தான் வென்றால் இலங்கையுடன் இறுதிப் போட்டி
- அடுத்தடுத்து இலங்கை - பாகிஸ்தான் போட்டிக்கு வாய்ப்பு

2022 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றில் இந்திய அணியுடனான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

நேற்று (06) துபாயில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

Image

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் அவ்வணியின் தலைவர் ரோஹித் சர்மா 72 (41) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

Image

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் டில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்டுகளையும் சாமிக கருணாரத்ன மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Image

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 174 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெற்றியிலக்கான 174 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 174 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 97 ஓட்டங்களுக்கு எவ்வித விக்கெட்டுகளையும் இழக்காதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி சார்ப்பில் குசல் மெண்டிஸ் 57 (37)  ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 52 (37) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்ததோடு, அணித் தலைவர் தசுன் ஷானக ஆட்டமிழக்காமல் 33 (18) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் யுஷ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக தசுன் ஷானக தெரிவானார்.

இதேவேளை, இன்று (07) இடம்பெறும் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுமானால், பாகிஸ்தான் அணி இலங்கை அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதற்கமைய, இரு அணிகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் (09) மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

INDIA INNINGS (20 overs maximum)
BATTING   R B M 4s 6s SR
KL Rahul  lbw b Theekshana 6 7 14 1 0 85.71
Rohit Sharma (c) c Nissanka b Karunaratne 72 41 70 5 4 175.60
Virat Kohli  b Madushanka 0 4 6 0 0 0.00
Suryakumar Yadav  c Theekshana b Shanaka 34 29 60 1 1 117.24
Hardik Pandya  c Nissanka b Shanaka 17 13 25 0 1 130.76
Rishabh Pant † c Nissanka b Madushanka 17 13 24 3 0 130.76
Deepak Hooda  b Madushanka 3 4 8 0 0 75.00
Ravichandran Ashwin  not out 15 7 13 0 1 214.28
Bhuvneshwar Kumar  b Karunaratne 0 2 6 0 0 0.00
Arshdeep Singh  not out 1 1 4 0 0 100.00
Extras (nb 1, w 7) 8  
TOTAL 20 Ov (RR: 8.65) 173/8
 
Did not bat: Yuzvendra Chahal
Fall of wickets: 1-11 (KL Rahul, 1.5 ov), 2-13 (Virat Kohli, 2.4 ov), 3-110 (Rohit Sharma, 12.2 ov), 4-119 (Suryakumar Yadav, 14.2 ov), 5-149 (Hardik Pandya, 17.3 ov), 6-157 (Deepak Hooda, 18.1 ov), 7-158 (Rishabh Pant, 18.3 ov), 8-164 (Bhuvneshwar Kumar, 19.3 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Dilshan Madushanka 4 0 24 3 6.00 11 0 1 3 0
Maheesh Theekshana 4 0 29 1 7.25 6 3 0 1 0
Chamika Karunaratne 4 0 27 2 6.75 8 1 1 0 0
Asitha Fernando 2 0 28 0 14.00 1 2 2 0 0
Wanindu Hasaranga de Silva 4 0 39 0 9.75 4 2 2 0 0
Dasun Shanaka 2 0 26 2 13.00 4 2 1 3 1
 
SRI LANKA INNINGS (Target: 174 runs from 20 overs)
BATTING   R B M 4s 6s SR
Pathum Nissanka  c Sharma b Chahal 52 37 48 4 2 140.54
Kusal Mendis † lbw b Chahal 57 37 66 4 3 154.05
Charith Asalanka  c Yadav b Chahal 0 3 4 0 0 0.00
Danushka Gunathilaka  c Rahul b Ashwin 1 7 11 0 0 14.28
Bhanuka Rajapaksa  not out 25 17 36 0 2 147.05
Dasun Shanaka (c) not out 33 18 33 4 1 183.33
Extras (b 2, lb 1, w 3) 6  
TOTAL 19.5 Ov (RR: 8.77) 174/4
 
Fall of wickets: 1-97 (Pathum Nissanka, 11.1 ov), 2-97 (Charith Asalanka, 11.4 ov), 3-110 (Danushka Gunathilaka, 13.5 ov), 4-110 (Kusal Mendis, 14.1 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Bhuvneshwar Kumar 4 0 30 0 7.50 8 4 0 2 0
Arshdeep Singh 3.5 0 40 0 10.43 4 4 1 0 0
Hardik Pandya 4 0 35 0 8.75 6 2 2 0 0
Yuzvendra Chahal 4 0 34 3 8.50 9 1 3 1 0
Ravichandran Ashwin 4 0 32 1 8.00 6 1 2 0 0

 


Add new comment

Or log in with...