கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் 'அரசறிவியல் அறிமுகம்' நூல் வெளியீடு

இளங்கலைஞரும், ஆசிரியருமான கனகரெத்தினம் சிவதர்சனின்'அரசறிவியல் அறிமுகம்' எனும் நூல் வெளியீடு கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலய பிரதான மண்டபத்தில்ஹம்சத்வனி கலைமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

கலைமன்றத்தின் பொருளாளர் நா.கஜேந்தினி தலைமையில் நடைபெற்ற விழாவில் பிரதம அதிதியாக கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி கலந்து கொண்டார். நூலின் அறிமுக நயவுரையை கல்குடா கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் செல்வி சீ.லோகேஸ்வரி, நூல் மற்றும் நூலாசிரியரருக்கான வாழ்த்துரையை எழுத்தாளரும் ஆசிரியருமான எ.த.ஜெயரஞ்சித், சிறப்புரைகளை ஆசிரிய ஆலோசகர் த.அகிலன், கிண்ணையடி சரஸ்வதி வித்தியால முதல்வர் ந.சுரேந்திரகுமார் மற்றும் முருக்கன்தீவு சிவசக்தி வித்தியாலய முதல்வர் செ.சுகுமார் ஆகியோர் நிகழ்த்தினர். 

இந்நிகழ்வில் அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆலய நிருவாக சபையினர், கிராம மட்ட அமைப்புக்களைச் சேர்ந்தோர், பெற்றோர், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.  

இந்நிகழ்வானது கிராமத்தில் மக்களின் கல்வி ஆர்வத்தை பறைசாற்றுவதாய் அமைந்ததுடன், கல்குடா கல்வி வலயத்தில் அரசறிவியல் தொடர்பாக வெளியிடப்பட்ட முதலாவது நூல் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நூல் உயர்தரத்தில் அரசறிவியலை ஒரு பாடமாக பயிலும் மாணாக்கர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அரசியல் ஆர்வலர்க்கும் உகந்த நூலென்பதும் குறிப்பிடத்தக்கது.

நடேசன் குகதர்ஷ


Add new comment

Or log in with...