சீன ஸ்மார்ட்போன் சந்தையில் 2022 Q2 இல் முதலிடத்தைப் பிடித்த vivo; Counterpoint அறிக்கை

ஜூலை மாதம் 27ஆம் திகதி வெளியிடப்பட்ட Counterpoint Research இன் Market Pulse அறிக்கையின் படி, vivo 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 19.8% சந்தைப் பங்குடன் முதலிடத்தை பெற்றமையின் மூலம், முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாக அதன் நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. vivo, பெரும்பாலும் உலகளாவிய மற்றும் உள்ளூர் அணுகுமுறையைப் பின்பற்றி, உள்ளூர் கலாச்சாரத்தைப் பற்றிய புரிதலை வளர்த்து, உலகம் முழுவதும் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. தற்போது, ​​vivo அதன் விற்பனை வலையமைப்பை 50 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வியாபித்துள்ளதுடன், பல்வேறு விலை மட்டங்களில் உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களைக் கொண்டுள்ளது.

vivo Sri Lanka வின் பிரதான நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங், Q2 2022 விற்பனை முடிவுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், vivoவின் பலதரப்பட்ட ஸ்மார்ட் போன்களானது வர்த்தகநாமத்துக்கு சந்தையில் ஒரு நல்ல பங்கைப் பெற உதவியதுடன், அதன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த உதவியது. இந்த வர்த்தகநாமம் அதன் தெளிவான தகவல் வழங்கல் மற்றும் புதுமையான பிராந்திய மூலோபாயம் காரணமாக இந்த வேகத்தை அடைந்துள்ளது. மேலும், இந்த வர்த்தகநாமம் அதன் பட்ஜட் பிரிவுக்கு, குறிப்பாக இளைய வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தை அதன் மையமாக கொண்ட வர்த்தகநாம நம்பிக்கையுடன், vivo ஒரு வலுவான வேகத்தை பராமரித்து, பிராந்தியங்களில் உள்ள தனது வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் தகுதியானது என்பதை நிரூபித்துள்ளது. இந்த நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமம் அதன் X, V மற்றும் Y தொடர்களின் காரணமாக இந்த வெற்றியை அடைந்துள்ளதுடன், அவை அண்மையில் பிராந்தியங்களில் மிகவும் பிரபலமாக உள்ளன. X தொடர், அதன் கெமராவை மையமாகக் கொண்ட புத்தாக்கம் மற்றும் ZEISS உடனான பங்குடமை, V தொடர், அதன் சீர்தன்மை மற்றும் தொழில்நுட்பம் மற்றும் Y தொடர் அதன் பட்ஜெட் பிளாக்ஷிப் அனுபவத்துடன் இளைஞர்களின் ஆர்வத்தைப் பெற உதவின.


Add new comment

Or log in with...