அனைத்து தொலைபேசி, புரோட்பேண்ட் கட்டணங்களும் செப்டெம்பர் 05 முதல் 20% - 25% அதிகரிக்கிறது

அனைத்து கையடக்க தொலைபேசி சேவைகள், நிலையான தொலைபேசி சேவைகள் மற்றும் கட்டண தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களை செப்டெம்பர் 05 முதல் அதிகரிக்க, இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) அந்தந்த வலையமைப்புகளுக்கு அனுமதித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் 05 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வருவதாக, TRCSL அறிவித்துள்ளது.

20% கட்டண அதிகரிப்பு
அதற்கமைய, கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, புரோட்பேண்ட் மற்றும் மேலதிக பெறுமதி சேர் சேவைகளுக்கான கட்டணங்கள் 20% இனால் அதிகரிக்கப்படவுள்ளன.

25% கட்டண அதிகரிப்பு
அதே நேரத்தில் அனைத்து கட்டண தொலைக்காட்சி கட்டணங்களும் 25% இனால் அதிகரிக்கப்படவுள்ளன.

காரணம் தெரிவிப்பு
அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள செயற்பாட்டுச் செலவுகளின் தொடர்ச்சியான அதிகரிப்பு காரணமாக கட்டணங்களை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டணங்கள்

# Bharti Airtel Lanka (Pvt) Ltd
# Dialog Axiata PLC
# Dialog Broadband Networks (Pvt) Ltd
# Dialog Television (Pvt) Ltd
# Hutchison Telecommunication Lanka (pvt) Ltd
# Lanka Bell Ltd
# Mobitel (Pvt) Ltd
# SLT PEO TV
# SLT Rental Revision

 


Add new comment

Or log in with...