2022 A/L பரீட்சைக்கு செப்டெம்பர் 01 - 08 வரை விண்ணப்பம் கோர அவகாசம்

- 2021 A/L பெறுபேறு மீள்பரிசீலனை விண்ணப்பம் செப். 19 - 30

2022 உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்காத அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் செப்டெம்பர் 01 - 08 வரை விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனை அறிவித்துள்ளார்.

அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்களது அதிபர்கள் மூலமாகவும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள், இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான, www.doenets.lk அல்லது onlineexams.gov.lk/eic ஊடாகவோ அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கையடக்க தொலைபேசி செயலி (Mobile App) 'DoE' ஊடாகவோ பிரவேசித்து ஒன்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 A/L பெறுபேறு மீள்பரிசீலனை விண்ணப்பம் செப். 19 - 30
இதேவேளை, அண்மையில் வெளியிடப்பட்ட 2021 க.பொ.த. உயர்த தர பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான மீள்பரிசீலனை விண்ணப்பம், செப்டெம்பர் 19 - 30 வரை கோரப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன அறிவித்துள்ளார்.

2021 க.பொ.த. உயர்த தர பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதி இணையத்தில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவை தொடர்பான மேலதிக விபரங்களுக்கு:

  • 011-2784208
  • 011-2784537
  • 011-2786616

துரித அழைப்பு இலக்கம்: 1911
தொலைநகல் இலக்கம்: 011-2784422
பொதுத் தொலைபேசி இலக்கங்கள்:

  • 011-2784200
  • 011-2784201
  • 011-2784202

Add new comment

Or log in with...