கடந்த மே 09ஆம் திகதி கொள்ளுப்பிட்டி அலரி மாளிகை மற்றும் காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டக்களங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக மற்றும் டான் பிரியசாத் ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைய விடுக்கப்பட்ட வேண்டுகோளை கருத்தில் எடுத்த நீதிமன்றம் இவ்வுத்தரவை இன்று (24) விடுத்தது.
குறித்த மூவரும் தங்களது கையடக்க தொலைபேசிகளை கையளிக்கும் வரை சந்தேகநபர்களை நீதிமன்றில் தடுத்து வைக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகே உத்தரவிட்டுள்ளார்.
குறித்த கையடக்க தொலைபேசிகளை கையளித்ததன் பின்னர் குறித்த சந்தேக நபர்களை விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கோட்டா கோகம மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத் ஆகியோரின் கையடக்க தொலைபேசிகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
கையடக்க தொலைபேசிகள் கையளிக்கப்படும் வரை சந்தேகநபர்களை நீதிமன்றில் தடுத்து வைக்குமாறும் தெரிவித்த நீதவான், கையளித்ததன் பின்னர் சந்தேகநபர்களை விடுவிக்குமாறும் உத்தரவிட்டார்.
கடந்த மே 09 இல் கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில், SLPP எம்.பி.க்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோர் கடந்த மே 17ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மிலான் ஜயதிலக எம்.பிக்கு ஜூன் 08 ஆம் திகதி பிணை வழங்கப்பட்டதோடு, சனத் நிஷாந்த ஜூன் 15ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
Add new comment