ஏலத்தில் வாங்கிய பெட்டியில் இருந்தது இரு பிள்ளைகளின் எச்சங்கள்

நியூஸிலாந்தின் ஒக்லாந்து நகரில் ஏலத்தில் வாங்கப்பட்ட பெட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் இரு சிறு பிள்ளைகளுடையவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது ஆரம்ப பாடசாலை செல்லும் 5 முதல் 10 வயது மதிக்கத்தக்க இரு பிள்ளைகளின் எச்சங்கள் என்று  அதிகாரிகள் தெரிவித்தனர். இரு  பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த அந்த எச்சங்கள் சில ஆண்டுகளாகப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் விசாரணை அதிகாரி கூறினார்.

ஒரு குடும்பத்தினர் சேமிப்புக் கிடங்கில் நடந்த ஏலத்தில் அந்தப் பெட்டிகளை வாங்கியபோது அதில் மனித எச்சங்கள் இருந்தது தெரியவந்தது.

உயிரிழந்த பிள்ளைகளின் அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெட்டிகளை வாங்கிய குடும்பத்திற்கும் அந்தச் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என பொலிஸார் கூறினர். குழந்தைகளின் மரணத்திற்குக் காரணமானவர்களைப் பிடிக்க விசாரணைக் குழு கடுமையாய் உழைத்துவருகிறது.


Add new comment

Or log in with...