முட்டை சில்லறை விலை ரூ. 43 - 45; அறிவித்து அதி விசேட வர்த்தமானி வெளியீடு

- மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்

ஓகஸ்ட் 19ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், முட்டைக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய

  • வெள்ளை நிற முட்டை: ரூ. 43
  • சிவப்பு/ கபில நிற முட்டை: ரூ. 45

2003 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 20(5) ஆம் பிரிவின் கீழ் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முட்டையின் விலையை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் ரூ. 5 இனால் குறைக்க முடிவு செய்துள்ளதாக, இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இன்றையதினம் (19) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, மேற் குறிப்பிடப்பட்டுள்ள உச்சபட்ச சில்லறை விலைக்கு மேலதிகமாக அதனை விற்பனை செய்யவோ, வழங்கவோ, விற்பனைக்கு விடவோ அல்லது விற்பனைக்கு வெளிப்படுத்தவோ, விற்பனைக்காக காடசிப்படுத்தவோ முடியாதென சபை கட்டளையிட்டுள்ளது.


Add new comment

Or log in with...