களனிவெளி ரயில் பாதையை விரிவாக்க அரசாங்கம் திட்டம்

வீடுகளை இழப்போருக்கு வீட்டுத்திட்டத்தில் வீடு

களனிவெளி ரயில் பாதை விரிவாக்கத் திட்டம் காரணமாக வீடுகளை இழக்கும் மக்களுக்காக நிர்மாணிக்கப்படும் "மாலபள்ள" வீட்டுத் திட்டத்தை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பார்வையிட்டார்.

களனிவெளி ரயில் பாதையானது விரிவாக்கம் செய்யப்பட்டு நவீனமயப்படுத்தப்படவுள்ளது. அந்தத் திட்டத்தினால் வீடுகளை இழக்கும் மருதானையிலிருந்து பாதுக்கை வரையிலான ரயில் பாதை  அருகில் அத்துமீறிய குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பானதும் பொருத்தமானதுமான இடங்களில் வீடுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாலபள்ள வீட்டுத்திட்டத்தில் 120 வீடுகள் கொட்டாவ பிரதேசத்தில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. வீடுகளை இழந்துள்ள தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு சகல வசதிகளையும் கொண்ட வீடுகள் இங்கு நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளன. அதன் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட இறுதிக்குள் நிறைவுசெய்யப்படவுள்ளன. இந்தநிலையிலேயே நேற்றைய தினம் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்படி நிர்மாணப் பணிகளை மேற்பார்வை செய்ததுடன் நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்துமாறும் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அமைச்சருடன் ரயில்வே பொதுமுகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் நேற்றைய இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...