நவம்பர் 16 நீதிமன்றில் ஆஜரானால் போதுமானது என தெரிவித்து மேர்வின் சில்வா விடுவிப்பு

கைதான முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா விடுவிக்கப்பட்டுள்ளார்.

2007ஆம் ஆண்டு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்றையதினம் (18) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்றையதினம் (18) பிற்பகல் கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவருக்கு பிணை உத்தரவு அவசியமற்றது எனவும் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையானால் போதுமானது எனவும் மேர்வின் சில்வாவை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


Add new comment

Or log in with...