இவ்வருடம் (2022) இடம்பெற்ற 2021 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சைகளின் செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போன பரீட்சார்த்திகளுக்காக மீண்டும் அப்பரீட்சைகளை நடாத்த பரீட்சைகள் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் இப்பரீட்சையின் எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றி செயன்முறைப் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போனமை தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்த பரீட்சார்த்திகளின் செயன்முறைப் பரீட்சைகளை எதிர்வரும் ஓகஸ்ட் 20, 21ஆம் திகதிகளில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
மேற்படி செயன்முறைப் பரீட்சைக்கான உரிய அனுமதிப்பத்திரம் பரீட்சார்த்திகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏதேனும் விபரங்கள் அறிய வேண்டுமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களூடாக தொடர்பு கொள்ளுமாறு, பரீட்சைகள் திணைக்களத்தின், ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன அறிவித்துள்ளார்.
தொலைபேசி இலக்கங்கள்:
- 011 2784208
- 011 2784537
- 011 2786616
தொலைநகல் இலக்கம்:
- 011 2784422
தபால் முகவரி :
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்,
பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு,
பெறுபேற்றுக் கிளை,
த.பெ.இல. 1503
கொழும்பு.
றிஸ்வான் சேகு முகைதீன்
Add new comment