இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலில் 3 சிரிய இராணுவத்தினர் பலி

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது மூன்று சிரிய படையினர் கொல்லப்பட்டு மேலும் மூவர் காயமடைந்ததாக சிரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள கிராமப்பகுதி மற்றும் டார்டூஸின் துறைமுக மாகாணத்தில் “சில புள்ளிகளை” இலக்கு வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.50க்கு ஏவுகணைத் தாக்குதல் இடம்பெற்றதாக சானா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிரிய வான் பாதுகாப்புப் படைகள் கடுமையாக எதிர்கொண்டு சில ஏவுகணைகளை வீழ்த்தியதாகவும் இராணுவத் தரப்பை மேற்கோள்காட்டி சானா குறிப்பிட்டது.

எனினும் இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் கருத்துக் கூற மறுத்துள்ளது.

2011ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது தொடக்கம் அந்த நாட்டில் அரச இலக்குகள், அதன் கூட்டணியான ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.


Add new comment

Or log in with...