4 மாதங்களில் 34 பேரை பலிகொண்ட யானைகள்

47 காட்டு யானைகளும் உயிரிழப்பு

யானை - மனிதர்களுக்கு இடையிலான மோதலில் 34 பேர் மரணித்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களின் பதிவாகும். இதேவேளை, 47 காட்டு யானைகளும் உயிரிழந்ததாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

8 மாகாணங்கள் மற்றும் 19 மாவட்டங்களில் உள்ள 131 பிரதேச செயலகப் பிரிவுகளில் யானை மற்றும் மனித மோதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டில் உயிரிழந்த 47 காட்டு யானைகளில், 13 யானைகள் துப்பாக்கிச் சூடு காரணமாகவும், மேலும் 17 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கியும் மரணித்துள்ளன.

கடந்த 3 வருடங்களில் யானை-மனித மோதல்கள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...