திருகோணமலை கிரிக்கெட் அணி தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவட்டங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் திருகோணமலை மாவட்டம் கிழக்கு மாகாண சம்பியனாகி தேசிய போட்டிக்கு தெரிவாகியது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் பங்கு கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (13) மாலை நடைபெற்றது.

இதன் இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியையே, திருகோணமலை அணி வீழ்த்தியது.

இதேவேளை பெண்களுக்கான கிழக்கு மாகாண மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணி சம்பியனானதோடு இரண்டாமிடத்தினை திருகோணமலை மாவட்டம் பெற்றது.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...