நல்லூர் ஆலய வளாகத்தில் நகையை திருடிய பெண் கைது

நல்லூர் கந்த சுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கியை அபகரித்துச் சென்ற பெண் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணிடம் கொள்ளையிட்ட 4 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்றுமுன்தினம் (13) சனிக்கிழமை இடம்பெற்ற நிலையில் சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய் ஒருவரிடமிருந்த கைக்குழந்தை அழுததால் தான் பார்ப்பதாக கூறிய மற்றொரு பெண்  குழந்தையை வாங்குவதாக பாசாங்கு செய்து தாயார் அணிந்திருந்த சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பித்துள்ளார்.

சங்கிலியை பறிகொடுத்த பெண் நல்லூர் உற்சவகால பொலிஸ் பிரிவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அராலியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரே பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கொள்ளையிட்ட நகையும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறினர்.

யாழ் விசேட நிருபர்


Add new comment

Or log in with...