கைதான 'ஹரக் கட்டா' வை அழைத்துவர நடவடிக்கை!

- துபாய் அரசுடன் பேச்சு நடத்தவும் முடிவு

துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் மிதிகம நந்துன் சிந்தக அல்லது ‘ஹரக் கட்டா’வை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

துபாய் பொலிஸார் மற்றும் அந்நாட்டு அரசாங்கத்துடன் இது தொடர்பில் உடனடியாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் துபாய் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹரக் கட்டா தனது மனைவியுடன் பிரான்ஸ் செல்வதற்காக துபாய் விமான நிலையத்துக்கு வந்தபோதே குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, ​​’ஹரக் கட்டா’ துபாய் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அவரிடம் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Add new comment

Or log in with...