உலக ஜனநாயகத்துக்கு முன்னுதாரணமாக இந்தியா திகழ்கிறது!

இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் சுதந்திரதின வாழ்த்து

இந்தியாவின் 75ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் இந்திய மக்களுக்கு, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் சார்பாக இலங்கைத் தெரிழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சுதந்திரதின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

வரலாற்றுக்காலம் தொட்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பேணப்பட்டுவரும் நட்புறவு மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் இ.தொ.கா செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாவாகும்.

பல்லின, பல்மொழி பேசும் இந்தியாவின் ஒற்றுமைக்கும் அதன் பன்மைத்துவமே காரணமாகும்.

உலக ஜனநாயகத்திற்கு முன்னுதாரணமாக திகழும் இந்தியா சுதந்திரமடைந்து 75ஆண்டுகளை கடந்துள்ளது.

மக்களின் ஒற்றுமை, கூட்டாட்சித் தத்துவங்கள், அதிகாரப் பரவலாக்கல் மற்றும் ஆட்சிகள் மாறினாலும் நிலைமாறான அரசக் கொள்கைகளும் நிலைபேண்தகு பொருளாதார கொள்கைகளும் இந்தியாவின் வளர்ச்சிக்கு உந்துச்சக்தியாக அமைந்துள்ளது.

உலகத்தில் மிக பெரிய வல்லரசாக மாறுவதற்கான பயணத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கின்றது.அதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு,எனது சுதந்திரதின வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் - என்றார்.


Add new comment

Or log in with...