சிரியா - சீனா இராணுவ தொடர்புசாதன ஒப்பந்தம்

சிரியாவின் இராணுவ தகவல் தொடர்புசாதனங்கள் வலையமைப்பில் தற்போது நிலவும் இடைவெளிகளை நிரப்புவதற்கு தேவையான தகவல் தொடர்புசாதன உபகரணங்களை விநியோகிப்பதற்குரிய ஒப்பந்தமொன்றை சீனாவும் சிரியாவும் மேற்கொண்டுள்ளன. இது தொடர்பில் இஸ்ரேல் கவலையடைந்துள்ளது.

குறிப்பாக இந்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேலின் பாதுகாப்பு துறை அதிக கவலை கொண்டுள்ளதோடு, முன்னெச்சரிக்கை சமிக்ஞை மணிகளை அமைப்பதன் மூலம் சிரியாவின் உளவுத்துறை திறன்கள் மேம்பட இவ் உபகரணங்கள் பயன்படும் என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் தொடர்புசாதன உபகரணத் தயாரிப்புகளின் சரியான தன்மை தெரியாதுள்ள போதிலும், அவை சிரியாவின் இராணுவ தகவல் தொடர்புசாதன வலையமைப்பில் தற்போது காணப்படும் இடைவெளிகளை நிரப்பக்கூடியதாக இருக்கும் என்று ஜே.என்.எஸ். சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...