தற்கொலைத் தாக்குதலில் நான்கு பாகிஸ்தான் வீரர்கள் பலி

வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின் மிர் அலி பகுதியில் கடந்த செவ்வாயன்று (9) இராணுவ வாகனத் தொடரணி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் நான்கு பாகிஸ்தான் துருப்பினர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் தலிபான்களின் முன்னணி தளபதி ஒருவர் வீதியோர குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டு சில நாட்களிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்கொலைதாரி, அதனை கையாண்டவர் மற்றும் வசதி அளித்தவர்கள் பற்றிய விபரங்களை கண்டுபிடிப்பதற்கு உளவுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


Add new comment

Or log in with...