ஆப்கான் தலிபான் ஆதரவு மதத் தலைவர் படுகொலை

தலிபான்களை ஆதரிப்பவரும் பெண் கல்விக்கு ஆதரவானவருமான ஆப்கானின் முன்னணி மதத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

காபுலில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் ஒன்றில் ஷெய்க் ரஹிமுல்லா ஹக்கானி பலியாகியுள்ளார்.

தற்கொலைதாரி தனது செயற்கைக் காலில் மறைத்து வந்த குண்டை வெடிக்கச் செய்தே மதத் தலைவரை கொன்றிருப்பதாக தலிபான் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாமிய அரசுக் குழு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. மதத் தலைவரின் அலுவலகத்துக்குள்ளேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஷெய்க் ஹக்கானி ஆப்கான் தலிபான் அரசுக்கு ஆதரவாக உள்ளார். அவர் ஆப்கான் இஸ்லாமிய அரசு குழுவை விமர்சிக்கும் முன்னணி மதத் தலைவராகவும் உள்ளார்.

கடந்த ஆண்டு தலிபான்கள் ஆப்கானில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் அங்கு கொல்லப்பட்ட முக்கிய புள்ளியாக இவர் உள்ளார். ஆப்கானில் சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ள பெண் கல்வி தொடர்பில் ஆதரவாக அவர் முன்னதாக பத்வா அல்லது மத ஆணை ஒன்றை பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...