Daraz Buy1Give1: தேவையுடைய 1000 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி

Daraz Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரக்கில் பெனாண்டோ, அத்தியாவசிய பொருட்களின் பொதியினை ஸ்தாபகர் மற்றும் நற்குண முன்னேற்ற அமைப்பின் பிரதம அறங்காவலர் குஷில் குணசேகரவிடம் உத்தியோகப்பூர்வமாக ஒப்படைத்த போது....

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி  நிலையினை சமாளிக்கும் வகையில், Daraz மே 2022 இல் “Buy1Give1” திட்டத்தை அறிமுகப்படுத்தியது. Buy1Give1 இன் நோக்கம் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கும் சமூகங்களுக்கு முடிந்தளவு நிவாரணங்களை வழங்குவதாகும். இந்த முயற்சியை மேலும் வலுப்படுத்த, நற்குண முன்னேற்ற அமைப்புடன் உடன் இணைந்து உதவிகள் தேவைப்படும் குடும்பங்களை கண்டறிந்து இம் முயற்சியின் மூலம் சேகரிக்கப்பட்ட பொருட்களை விநியோகம் செய்து, கொடைகள் நிறைந்த உலகை உருவாக்க Daraz உறுதிபூண்டுள்ளது,

இந்த முயற்சி குறித்து Daraz Sri Lanka டுயமெய இன் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ரக்கில் பெர்னாண்டோ குறிப்பிடுகையில் “இலங்கை முன்னெப்போதும் இல்லாத நெருக்கடி நிலையினை எதிர்கொண்டுள்ளது, மேலும் ஒருவரையொருவர் வலுப்படுத்துவதற்கும் ஒருவரையொருவர் உயர்த்துவதற்கும் புதிய வழிகளைக் கண்டறிய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். Buy1Give1 போன்ற செயற்திட்டங்கள் உலகின் பிற பகுதிகளிலும் நடைமுறையில் உள்ளது, அன்றாட நடவடிக்கைகளை அர்த்தமுள்ள ஒன்றாக மாற்றும் ஒரு வழிமுறையாகவே, இத்தருணத்தில் இலங்கையிலும் அதனை முயற்சிக்க நாம் விரும்புகின்றோம். நாங்கள் எங்கள் நுகர்வோர் மீது தேவையற்ற அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை அத்தோடு அவர்களின் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் போது, எங்களின் இச்சிறப்பான முயற்சியின் ஒரு பகுதியாக அவர்களும் இருப்பதற்கான  ஓர் வழியினை நாம் உருவாக்கியுள்ளோம். சேகரிக்கப்பட்ட பொருட்கள் அதிக தேவையுள்ள குடும்பங்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்வதனால்,  விநியோக செயற்பாடுகளில் நற்குண முன்னேற்ற அமைப்புடன் பங்காளர்களாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” எனக் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட  சமூகங்களில் உள்ள குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக 8,000 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் குளியலறை தொடர்பான பொருட்கள் கையளிப்பு

ஜூலை 18, 2022 அன்று, Daraz 10,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள 8,800 அத்தியாவசிய தேவை பொருட்களை நற்குண முன்னேற்ற அமைப்பிற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது. இலங்கையில் ஏற்கனவே 23,000 குடும்பங்களைச் சென்றடைந்துள்ள அறக்கட்டளையின் “Feed the Hungry”  திட்டம் மற்றும் “Goodness Boxes” ஆகியவற்றுடன் இப் பொருட்கள் சேர்க்கப்படும். Daraz Buy1Give1 செயற்திட்டத்தின் மூலம் குறைந்தது 1,000 குடும்பங்கள் வரை பயனடைய முடியும் என்று நற்குண முன்னேற்ற அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

நற்குண முன்னேற்ற அமைப்பின் ஸ்தாபகர் மற்றும் தலைமை அறங்காவலர் திரு.குஷில் குணசேகர கூறுகையில்: “அதிகமாக தேவை ஏற்படும் சந்தரப்பங்களில் தங்களின் Buy1Give1 திட்டத்தின் ஊடாக பசிக்கு உணவளிக்கும் திட்டத்திற்கு பொருட்களை நன்கொடையாக Daraz வழங்கி கொண்டிருப்பது எங்களுக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கின்றது. குறிப்பாக கேட்காமலே நிபந்தனையின்றி வழங்கப்படும் எந்தவொரு பரிசும்,  எப்போதும் தாராள மனப்பான்மை மற்றும் இரக்க குணத்தின் உயர்ந்த செயலாக கருதப்படுகின்றது. எதிர்கொண்டிருக்கும் போராட்டங்கள் மற்றும் நெருக்கடிகளை தணிக்க காட்டப்படும் இக்கருணையை நாங்கள் மிகவும் மதிக்கின்றோம். இம் மகத்தான செயலை பாராட்டுகின்றோம். 1,000 குடும்பங்கள் உணவை அணுக உதவுவதன் மூலம் Daraz அவர்களின் சமூக அக்கறையை நிரூபித்துள்ளனர், மேலும் அந்த தாராள மனப்பான்மை மனிதநேயத்தின் உண்மையான நற்செயலாகும்.” எனக் கூறினார்.

Daraz தனது இலத்திரனியல் வணிகத் தளத்தின் மூலம் இலங்கை சமூகத்தை ஆதரிப்பதற்கும் கட்டியெழுப்புவதற்குமான புதிய முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்ளும்.

Daraz Sri Lanka இலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் ஷொப்பிங் தளமாகும், மேலும் மளிகைப் பொருட்கள் (Daraz Mart)> நுகர்வோர் மின்னணுவியல், வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன், விளையாட்டுப் பொருட்கள், செல்லப்பிராணிகளுக்கான பொருட்கள் என பல்வகையான தயாரிப்புகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. Daraz Sri Lanka தெற்காசியாவின் முதன்மையான ஒன்லைன் ஷொப்பிங் தளமான Daraz இன் ஒரு பகுதியாகும், இது பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் தனது செயற்பாடுகளை கொண்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பம், வடிவமைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் மற்றும் தரவு மற்றும் சேவை தீர்வுகள் ஆகியவற்றின் ஆதரவுடன் Daraz Sri Lanka 2.5 மில்லியன் பயனர்கள், 125,000 பதிவுசெய்யப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் எந்நேரத்திலும் 4.5 மில்லியனுக்கும் அதிகமான தயாரிப்புகள் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. Daraz இன் விநியோக நிறுவனமான DEX> ஒவ்வொரு நாளும் 50,000 க்கும் மேற்பட்ட பெக்கேஜ்களை நுகர்வோருக்கு வழங்குகிறது, மேலும் அந்த 50,000+  இற்கும் மேற்பட்ட பெக்கேஜ்களில் பெரும்பாலானவை தளத்தில் செயல்படும் உள்;ர் விற்பனையாளர்களால் விற்கப்படுகின்றன. Daraz, எளிதாக வாங்குதல், விரிவான வாடிக்கையாளர் பராமரிப்பு மற்றும் தொந்தரவில்லாத ஷொப்பிங் மற்றும் மீளளித்தல் போன்ற சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. அலிபாபா குழுமத்தின் பலத்தினால் ஆதரிக்கப்படும் Daraz இங்கு வேகமாக வளர்ந்து வரும் இலத்திரனியல் வர்த்தக தளமாக மாறுகிறது.


Add new comment

Or log in with...