103 சீன பிரஜைகளுக்கு கொவிட் தொற்று உறுதி

PHI சங்கத் தலைவர் உபுல் தெரிவிப்பு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பணியாற்றிய 103 சீன பிரஜைகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.  அவர்கள் கடந்த 10 நாட்களுக்குள் நாட்டுக்கு வந்தவர்களாவர் எனத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். எனினும், அவர்கள் இதுவரையில், பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...