இலங்கையரின் தமிழ் மொழிப் புலமையை புகழ்ந்து பேசிய நடிகர் நாசர்

- மூதூர் நிகழ்வில் பிரதம விருந்தினராக உரை

நீங்கள் பேசுகின்ற தமிழ் என் காதில் பாடல் போல் ஒலிக்கிறது என இலங்கைத் தமிழர்களின் மொழிப் புலமையை தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் புகழ்ந்து பேசியுள்ளார்.

திருகோணமலை – மூதூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் பேசுவதை விட உங்களைப் பேச விட்டு நான் கேட்பது தான் மிகவும் சுவையான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் பேசுகின்ற அந்த தமிழ் எனக்கு பாடல் போல் இருக்கிறது. எங்கள் புழக்கத்தில் இருந்து விடுபட்ட பழந்தமிழை இன்னும் நீங்கள் மிகவும் எளிதாக, சுவாசத்தில் ஒன்றாக அந்த வார்த்தைகளை அழகாக கையாளுகிறீர்கள்.

அதற்காக நான் தலைவணங்கி அன்பு செலுத்துகிறேன்.

எடுத்துக்காட்டாக நித்திரை என்று சொல்லுகின்ற வார்த்தை, அந்த ஒரு சொல் எங்கள் எழுத்து வழக்கிலும் போய்விட்டது.

என்ன நித்திரை கொள்கிறீர்களா என்று கேட்டால் தமிழகத்தில் சிரிக்கும் நிலைமை இருக்கிறது. அங்கு தூக்கம் என்ற சொல்லாடலே புழக்கத்தில் இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...