- இதுவரை 55 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்
- கடந்த 7 நாட்களில் 1,246 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 4.3 மில்லியன் எரிபொருள் பரிவர்த்தனை
தேசிய எரிபொருள் அட்டைக்கான QR குறியீட்டை பெறுவதற்கான புதிய பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ICTA அறிவித்துள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த அத்தியாவசிய கணித் தொகுதி பராமரிப்பு பணிகள் காரணமாக 48 மணித்தியாலங்களுக்கு புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய National Fuel Pass பதிவுகளை (fuelpass.gov.lk) மேற்கொள்ள முடியுமென, தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) அறிவித்துள்ளது.
Important Notice!
National Fuel Pass New Registrations are enabled now.
We regret any inconvenience caused.https://t.co/iHYUrCdInq pic.twitter.com/OdzPQrfedF— ICTA Sri Lanka (@icta_srilanka) August 8, 2022
மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றின் கணனிக் கட்டமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு, ICTA இனால் National Fuel Pass திட்ட பதிவுகள் உருவாக்கப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 55 இலட்சம் பதிவுகள்
இதேவேளை இதுவரை National Fuel Pass திட்டத்தில் 5.5 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மின்சக்தி வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
Complete One weeks data from the National FuelPass QR system
Over 5.5 Million vehicles registered & over 4.3 Million transactions completed in 7 days @ 1246 Fuel Stations islandwide.
* CTB & Private Busses were given more fuel apart from the standard quota @ 107 CTB depots. pic.twitter.com/mtEEwStM4B— Kanchana Wijesekera (@kanchana_wij) August 8, 2022
அத்துடன் நாடு முழுவதும் கடந்த 7 நாட்களில் 1,246 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 4.3 மில்லியனுக்கும் அதிக எரிபொருள் விநியோக பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடு முழுவதிலுமுள்ள 107 டிப்போக்கள் ஊடாக, தனியார் பஸ்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக எரிபொருள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வாகனங்களுக்கு இவ்வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீடுகள் நள்ளிரவு முதல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
றிஸ்வான் சேகு முகைதீன்
Add new comment