கடற்கரை கரப்பந்தாட்டத்தில் இலங்கை அணி காலிறுதியில்

இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில், இலங்கை அணி 2-0 என வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இலங்கையின் மலிந்த மற்றும் அஷேன் ஆகியோர் 21-11 மற்றும் 21-11 என்ற புள்ளிகள் கணக்கில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் அணியின் ஹொட்ஜ் மற்றும் சீபுரூக்ஸ் ஆகியோரை வீழ்த்தினர். இந்தப்போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி காலிறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

இதேவேளை பெண்களுக்கான போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. குறிப்பாக இந்தப்போட்டியில் டிரினிடாட் மற்றும் டொபெகோ அணியைச் சேர்ந்த வீராங்கனை உபாதைக்கு முகங்கொடுத்ததால், இலங்கை அணி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது. இலங்கை அணி காலிறுதியில் கனடா அணியை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...