SLT MOBITEL - Softlogic IT உடன் கைகோர்த்து தரவு பரிமாற்றம், பகுப்பாய்வு சேவைகள்

தேசிய ICT தீர்வுகள் வழங்குநரான SLT-Mobitel ஆனது, Softlogic IT  உடனான டிஜிட்டல் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, தரவு பரிமாற்றம் மற்றும் தரவுப் பகுப்பாய்வு (Data Exchange and Analytics Services) சேவைகளை அறிமுகப்படுத்துவதுவதன் மூலம் Softlogic IT உடனான மூலோபாய ஒத்துழைப்பை அறிவித்துள்ளது. Data Exchange and Analytics Platform (தரவு பரிமாற்றம் மற்றும் பகுப்பாய்வு தளமான) IZAC, மற்றும் Microstrategy (Nasdaq: MISTR) ஆகியவற்றின் கருவிகள் மற்றும் செயன்முறைகளைப் பயன்படுத்தி, சிக்கல்களைத் தீர்ப்பதில் தரவு சார்ந்த அணுகுமுறையைப் பின்பற்றவும், தரவுகளில் ஆழமான விடயங்களைப் பெறவும் இது முக்கியமாக உதவுகிறது. IZAC என்பது Whiteklay நிறுவனத்தின் உலகளாவிய தரவுப் பரிமாற்ற தளமாகும். MicroStrategy (Nasdaq: MISTR) ஆனது, சுயாதீன வெளிப்படையான வர்த்தகத்தை மேற்கொள்ளும் மிகப்பெரிய பகுப்பாய்வு மற்றும் வணிக நுண்ணறிவு நிறுவனமாகும்.

ஒரு வலுவான தரவு முகாமைத்துவ அமைப்பானது, ஒரு நிறுவனத்திற்கு அதன் விற்பனை மற்றும் செயற்பாட்டு முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் அதன் அடிமட்டத்தை உயர்த்த உதவும் என்பது பல நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். முடிவெடுத்தல் விஞ்ஞானத்தின் திறனான பயன்பாடு, நிறுவன ரீதியிலான செய்திப்பரிமாற்றம் மற்றும் உத்திகளிலான அதிக தெளிவுக்கு வழிவகுக்கின்றது. SLT-Mobitel Akaza கிளவுட் தளத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சந்தா அடிப்படையிலான நுண்ணறிவு தரவு முகாமைத்துவமானது, ஒரு சேவையாக நிறுவனங்களுக்கு கூட்டுத் தீர்வை வழங்கும். இந்தத் தீர்வு நிறுவனங்களுக்கு தரவு அமைவுகளைக் காட்சிப்படுத்தவும், நிறுவனங்கள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பதற்கான எதிர்வுகூறல் கணிப்பு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தவும், அதன் மூலம் அவர்களின் வணிகச் செயற்பாடுகளை மேலும் திறனாக்கவும் வசதியளிக்கும்.

SLT-Mobitel இனால் வழங்கப்படும் புதிய சேவை குறித்து கருத்து தெரிவித்த SLT இன் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க, “நிலைபேறான வளர்ச்சியை அடைவதற்கும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், நிறுவன ரீதியான வாடிக்கையாளர்களுக்கு Data ஆனது, தற்போதைய ‘உண்மையின் ஆதாரம்’ (‘source of truth’) என்பதை SLT-Mobitel அங்கீகரிக்கிறது. இணைப்பு, கிளவுட் மற்றும் தரவு ஆகியவற்றைக் கொண்ட பயணத்தில், SLT உடன் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம், நிறுவன டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்தும் பாத்திரமான Whiteklay தளத்தின் Data Virtualization, Analytics மற்றும் AI கருவிகளைப் பயன்படுத்தி முடிவெடுப்பதில் இலங்கையில் உள்ள நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நாம் எதிர்பார்க்கின்றோம்." என்றார்.

Whiteklay Pvt Ltd நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி அமித் குமார் பரிஜா இந்தச் சேவையைப் பற்றி விரிவாக தெரிவிக்கையில், “உங்களிடம் சிறந்த தரவுப் பொறியியல் வசதி இருந்தால் மாத்திரமே விஞ்ஞான ரீதியான உண்மையான மதிப்பு உணரப்படும். இன்றைய உலகில், வலுவான தரவுப் பின்னணி இல்லாமையானது, தரவுகளிலிருந்து சில விரைவான தரவு அறிக்கைகளைப் பெறுவதானது, எந்தவொரு நிறுவனத்திற்கும் ஒரு தடையாக இருக்கக்கூடாது. தரவுகளில் ஒரு போக்குப் பாதையொன்றை அடையாளம் காண முடிந்தால், 'என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?' என ஆய்வாளர்கள் கணனித் தொகுதியிடம் கேட்டு அறிய முடியும். நேரடியான வகையில் தரவை பகுப்பாய்வு செய்யவும் அவர்களின் விருப்பப்படி டேஷ்போர்டை உருவாக்க அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையையும் அளிக்கிறது. சில நாட்களுக்குப் பின்னர் அவர்களுக்கு டேஷ்போர்ட் தேவையில்லையெனில், அவர்கள் அதை அகற்றலாம் அல்லது திருத்திக் கொள்ளலாம். ஆயினும் உண்மை யாதெனில், எந்தவொரு கட்டமைப்பிலும் இத்தகைய அமைப்புகளை பயன்படுத்துவதற்கு தொழில்நுட்பம், மூலோபாயம் மற்றும் நிதிக் குழுக்களிடமிருந்து பாரிய முயற்சி தேவைப்படுகிறது. தொழில்நுட்பக் குழு குறிப்பிட்ட வலுவைக் கொண்டிருக்காவிட்டால், தொகுதியை அமைப்பதற்கும், அதனை நிர்வகிப்பதற்கும், இயக்குவதற்குமான திறன்களைப் பெறுவதற்குமான வரவு செலவு மற்றும் நேரம் ஆகியவற்றிலிருந்து ஒரு பாரிய பகுதியை அது எடுக்கும். இங்குதான் பல நிறுவனங்கள், ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் தொந்தரவு இல்லாத பெரிய தரவு பரிமாற்ற தளத்தை இயக்கும், ‘தரவு ஆய்வை ஒரு சேவையாக’ பெற விரும்புகின்றன." என்றார்.

இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த Softlogic Information Technologies (Pvt) Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷான் ரசூல், இலங்கையின் வர்த்தக நிலைமைகள் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இன்று நிறுவனங்கள் அதன் தலைமைத்துவ பதவிகளை அச்சுறுத்தும் புதிய சவால்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார். எனவே, "தரவை" ஒரு போட்டி வணிக சொத்தாக வரிசைப்படுத்தும் திறனானது, வெற்றிகரமான சந்தை தலைவர்களை வேறுபடுத்திக் காண்பிக்கும். SLT மூலம் AI வசதியை ஒரு சேவையாக அறிமுகப்படுத்துவதானது, இலங்கையில் முதன்முதலாக இடம்பெறும் ஒரு விடயமாக அமைகின்றது. நாட்டின் முன்னணி system ஒருங்கிணைப்பாளரான Softlogic Information Technologies (Pvt) Ltd உடன் இணைந்து, AI இற்கான Gartner quadrant வசதியில் முன்னணியில் உள்ள Micro Strategy மற்றும் முன்னணி AI ஒருங்கிணைப்பு நிறுவனமான Whiteklay ஆகியவற்றின் இணைவானது, எமது உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது தொடர்பான புதிய பாதையை ஏற்படுத்தி, இந்நிறுவனங்களுடனும் AI தோற்றப்பாட்டிலும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை உருவாக்குகின்றன. இவ்சேவைகள், பல மூலங்களில் இருந்து தரவை ஒருங்கிணைத்தல், மையப்படுத்தப்பட்ட தரவு முகாமைத்துவம், பாரிய தரவு பகுப்பாய்வு, ஒரு தரவு விஞ்ஞானி மற்றும் வாடிக்கையாளர் வசம் இருக்கும் ஒரு தொழில்துறை நிபுணரால் ஆதரிக்கப்படும். AI ஐப் பயன்படுத்தும் உள்ளூர் வணிகங்கள், வணிகம் தொடர்பான விளைவுகளை மேம்படுத்தக்கூடிய தரவு சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கான தரவுப் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம் தனித்துவமான நன்மையைப் பெறுகின்றன. பயனுள்ள சந்தைப்படுத்தல், புதிய வருமான வாய்ப்புகள், வாடிக்கையாளர் தனிப்பயனாக்கம் மற்றும் மேம்பட்ட செயல்பாட்டுத் திறன் ஆகிய நன்மைகள் இதில் அடங்குகின்றன. ஒரு பயனுள்ள மூலோபாயத்துடன் இணைந்து, இந்த நன்மைகள் அதன் போட்டியாளர்கள் தொடர்பான போட்டிமிக்க நன்மைகளை வழங்கக் கூடியன.

Softlogic Information Technologies பற்றிய மேலதிக தகவல்களை www.softlogicit.lk இணையத்தில் பெறலாம்

MicroStrategy India Pvt. Ltd நிறுவனத்தின் இந்தியா மற்றும் இலங்கைக்கான விற்பனை பணிப்பாளர்,  சுனில் வத்கம கருத்துத் தெரிவிக்கையில், "MicroStrategy Analytics Platform ஆனது, Enterprise Analytics தொடர்பான தொடர்ச்சியாக சிறந்த ஒன்றாக மதிப்பிடப்படுவதுடன், அது Fortune Global 500 இல் உலகின் மிகவும் கவனத்தை ஈர்த்த பல தரக்குறியீடுகளால் பயன்படுத்தப்படுகிறது. சிறந்த முடிவெடுப்பதற்கான செயற்பாட்டு ரீதியான தரவு வெளிப்படுத்தல்களை வழங்குவது தொடர்பில், இந்த கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்த மூலோபாய கூட்டாண்மையானது, MicroStrategy யினது தூரநோக்கான Intelligence Everywhere™ (நுண்ணறிவு எல்லா இடங்களிலும்) என்பதை செயல்படுத்துவதற்கு  வாய்பை ஏற்படுத்துகிறது. பலதரப்பட்ட கலாசாரங்கள், மொழிகள், இனங்களுக்கு தாயகமான இலங்கைக்கு, தரவு, தகவல், செயற்படக்கூடிய தரவு வெளிப்படுத்தல்களின் ஆற்றலைப் பயன்படுத்துவதற்காக நிறுவனங்களுக்கு உதவுவதற்கான எமது வெளிப்பாடானது, மேலும் ஒரு சிறந்த உந்துதலாக இருக்கும். எமது தளமானது, உயர் நுண்ணறிவைக் கொண்டுள்ளது. இது ஒரு திருப்புமுனை மிக்க தொழில்நுட்பமாகும் என்பதுடன், இது பிரபலமான வணிக பயன்பாடுகளில் செயற்படக்கூடிய நிறுவனத் தரவை மேவுவதன் மூலம், பயனர்களுக்கு புத்திசாலித்தனமான, விரைவான முடிவுகளை எடுக்க உதவுகிறது. இந்த மூலோபாய கூட்டாண்மையானது இலங்கைச் சந்தையில் எமது வளர்ச்சியை ஊக்குவிக்கும் என நம்புவதுடன், இலங்கையிலுள்ள பிரதான வர்த்தகநாமங்கள் எமது தனித்துவமான பெறுமதியை மேம்படுத்துகின்றமை தொடர்பில் நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைகிறேன்." என்றார்.


Add new comment

Or log in with...