கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய மற்றுமொரு சடலம்

வத்தளை, திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுக கடலில், 35 - 40 வயது மதிக்கத்தக்க, அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சடலம் தலைப்பகுதி மற்றும் கால் பகுதி உரப்பையினுள் இடப்பட்டு, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றைய தினம் (05) இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம், 5 அடி 8 அங்குல உயரமானது எனவும், கறுப்பு நிற கட்டை காற்சட்டை மற்றும் நீல நிற மேற்சட்டை, கறுப்பு நிற கல் பதித்த வெள்ளி நிற மோதிரமும் அணிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், ஆரம்ப கட்ட நீதவான் மரண விசாரணை இடம்பெற்றுள்ளதோடு, சடலம் தற்போது ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றையதினம் (06) பிரேதப் பரிசோதனை இடம்பெறவுள்ளது.

வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...