தனியார் பஸ்கள் நேற்று பணிப் புறக்கணிப்பில்

பயணிகள் பெரும் சிரமத்துக்கு முகம்கொடுப்பு

புறக்கோட்டை வர்த்தகர் சங்கம் தெரிவிப்பு

தனியார் பஸ்கள் நேற்று வெள்ளிக்கிழமை சேவையில் ஈடுபடாமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

அகில இலங்கை தனியார் பஸ் சங்கத்தினர் நேற்று முன்தினம் (04) வியாழக்கிழமை இரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

ஒரு பஸ்சுக்கு வழங்கப்படும் 40 லீற்றர் டீசல் போதாதென தெரிவித்தே, மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இதனால், போக்குவரத்து சபை பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டன. அரச பஸ்கள் போதியளவு சேவையில் ஈடுபடாமையால் மக்கள் அசௌகரியங்களுக்குள்ளாகினர்.

இதனால்,அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் வீதிகளில் பஸ்களுக்காக காத்திருந்ததை காண முடிந்தது. பலர், பல கிலோ மீற்றருக்கு நடந்து செல்லும் நிலைமை ஏற்பட்டது.

குறைந்தபட்ச பஸ் கட்டணம் 34 ரூபாவாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளதுது. பஸ் கட்டணத்தை குறைத்தும் எங்களால் நிம்மதியாக பஸ்ஸில் பயணிக்க முடியவில்லையென மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன், கியூ. ஆர். முறைமூலம் எரிபொருட்கள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கி மக்களின் நலனுக்காக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தாமை மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 


Add new comment

Or log in with...