கூரையை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் புகுந்த ஆண் புலி

மயக்க ஊசி செலுத்தி உயிருடன்பிடித்த வன அதிகாரிகள்

தலவாக்கலை பகுதியில் வீட்டுக்குள் புகுந்து மறைந்திருந்து சிறுத்தை தாக்கியதில், குடும்பஸ்தர் ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம்,தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை மல்லிகைப்பூ தோட்டத்தில் நேற்று (05) காலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நேற்று காலை சுமார் 07 மணியளவில் வீட்டிலிருந்தோர் வெளியேறும் சந்தர்ப்பத்தில், சிறுத்தைப்புலி ஒன்று வீட்டில் புகுந்து கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த து. இதனையடுத்து, சிறுத்தைப்புலியின் காலடிகளை பார்த்து டார்ச் லைட் வௌிச்சத்தில் வீட்டினுள் தேடிய போது, திடீரென சிறுத்தை பாய்ந்து தோள் பட்டை, கைகளை தாக்கி காயப்படுத்தியுள்ளது.இதில் கடும் காயங்களுக்குள்ளான நபர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுத்தை புலி தொடர்ந்து வீட்டினுள் இருப்பதாக பொலிஸாருக்கும், வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டது.

இந்தச் சிறுத்தைப்புலியை மயக்கமுறச்செய்து வீட்டிலிருந்து, வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

ஹற்றன் விஷேட நிருபர்


Add new comment

Or log in with...