எண்ணெய் உற்பத்தியை சற்று அதிகரிக்க முடிவு

ஒபெக் பிளஸ் என அழைக்கப்படும் பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு மற்றும் அதன் கூட்டணி நாடுகள் செப்டெம்பரில் எண்ணெய் உற்பத்தியை சற்று அதிகரிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனினும் மசகு எண்ணெய் விலையை கட்டுப்படுத்த உற்பத்தியை விரைவாக அதிகரிக்கும் அழைப்புக்கு இது முரணாக உள்ளது.

இதன்படி செப்டெம்பர் மாதத்தில் நாளொன்றுக்கு 100,000 பீப்பாய்களை அதிகரிப்பதற்கு ஒபெக் பிளஸ் அமைப்பு தீர்மானித்துள்ளது. ஒபெக் மற்றும் ஒபெக் அல்லா அமைச்சர்களின் கூட்டத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த அதிகரிப்பு சர்வதேச தேவையின் 0.1 வீதத்துக்கு இணையானதாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் மத்திய கிழக்கு விஜயம் மேற்கொண்டு சவூதி அரேபியாவுக்கு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை விற்பதற்கு ஒப்பந்தமான நிலையில் உலக சந்தைக்கு மேலும் எண்ணெய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

இந்நிலையில் இந்த முடிவு பைடனின் முயற்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


Add new comment

Or log in with...