காலிங்க குமாரவின் 400 மிற்றர் அரையிறுதிப் போட்டி நாளை

இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் அரையிறுதியில் காலிங்க குமாரகே பங்கேற்கவுள்ளார்.

குமாரகே பங்கேற்கும் அரையிறுதிப் போட்டி இலங்கை நேரப்படி நாளை சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆரம்ப சுற்றின் முதல் தெரிவுப் போட்டியில் கலந்துகொண்ட குமாரகே 46.53 விநாடிகளில் போட்டியை முடித்து நான்காவது இடத்தை பிடித்ததோடு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டார்.

இந்தப் போட்டியில் 0.02 விநாடிகளிலேயே அவர் மூன்றாவது இடத்தை தவறவிட்டார். எனினும் நேரடி தகுதி பெறாத வீரர்கள் இடையே வேகமான காலத்தை பதிவு செய்ததன் மூலமே அவரால் அரையிறதிக்கு முன்னேற முடிந்தது.

இந்நிலையில் அவர் அரையிறுதியில் தனது சிறந்த காலமான 45.73 விநாடிகளை நெருங்கும் பட்சத்தில் அவரால் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் காண முடியுமாக இருக்கும்.

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டி ஓகஸ்ட் 7ஆம் திகதி பி.ப 3.15க்கு நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...