கல்கிஸ்ச நீதிமன்றத்தில் துப்பாக்கிப் பிரயோகம்

துப்பாக்கிதாரி தப்பியோடி தலைமறைவு

நீதிமன்றத்தில் சாட்சிக் கூண்டில் நின்ற நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று கல்கிஸ்சையில் இடம் பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லையென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ச நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று பிற்பகல் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது சாட்சிக் கூண்டில் நின்று சாட்சியமளித்தவரை இலக்கு வைத்து வெளியிலிருந்து வந்த நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இலக்குத் தவறியதால் சாட்சி கூண்டில் நின்றவருக்கோ அல்லது வேறு எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...