எகிப்து ஜனாதிபதியிடமிருந்து ஜனாதிபதி ரணிலுக்கு வாழ்த்து

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 8ஆவது நிறைவேற்றுஜ னாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு எகிப்து இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி அப்தல் பத்தாஹ் அல்சிசி (Abdel Fattah Al Sisi) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில்,

ஜனாதிபதி  என்ற உயர்பதவிக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும் என்பதுடன் உங்கள் திறமையின் மீதான நம்பிக்கையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

எதிர்கால சந்ததியினரின் வளமான மற்றும் செழுமையான பொருளாதார மேம்பாட்டுக்கு  உங்களின் அரசியல் முதிர்ச்சி மேலும் வழிகோலும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

எகிப்து மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலானநீண்டகால நட்பு  பொதுவான நலன்களை முன்னேற்றுவதற்கும், வளமான எதிர்காலத்தை உறுதி செய்து கொள்வதுடன் நமது இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த வாய்ப்பை நான் சந்தர்ப்பமாக பயன்படுத்துகிறேன்.

உங்கள் நல்வாழ்வுக்காகவும், இலங்கை மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காகவும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.


Add new comment

Or log in with...