இவ்வாரம் சனி, ஞாயிறு தினங்களில் மின்வெட்டு கிடையாது

- நீர் மின்னுற்பத்தியில் முன்னேற்றம்

இவ்வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை அறிவித்துள்ளார்.

அதற்கமைய, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டமிட்ட மின்வெட்டு, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய ஓகஸ்ட் 06, 07ஆம் திகதிகளில் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த இரு தினங்களாக அதிகளவான நீர் மின்னுற்பத்தி இடம்பெறுவதன் காரணமாக இன்றையதினம் ஒரு மணித்தியால மின்வெட்டே அமுல்படுத்தப்பட்ட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களாக 40% இற்கும் குறைவான நீர் மின்னுற்பத்தியே இடம்பெற்று வந்ததாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை (02) அதிக மின்னுற்பத்தி, நீர்மின்னுற்பத்தி மூலம் இடம்பெற்றதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

றிஸ்வான் சேகு முகைதீன்

 

 

ஓகஸ்ட் 02 மின்னுற்பத்தி சாராம்சம்
இலங்கை மின்சார சபை (CEB)

  • நிலக்கரி: 30.69% (11.39GWh)
  • நீர்: 57.17%
  • அனல்: 2.20%
  • காற்று: 3.42%

தனியார்

  • அனல் (IPP): 0%
  • சூரிய சக்தி: 0.44%
  • காற்று (IPP): 6.10%

Add new comment

Or log in with...